
அடுத்தவர் வெற்றியில் பொறாமைப்பட்டு
மற்றவரை மிதித்து முன்னேறி
குறுக்கு வழியில் சென்று
தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு
கிடைக்கும் வெற்றி
நிலைப்பது
குறுகிய காலமே…
விடாமுயற்சியுடன் பொறுமை கடைப்பிடித்து
நேர்வழியில் சத்தியம் காத்து
கிடைப்பதில் திருப்தி அடைந்து
பண்புடன் அன்பு செலுத்தி
கிடைக்கும் வெற்றி
எப்போதும்
நிரந்தரமே…