
சித்திரைப் புத்தாண்டானது இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டு பிறக்கிறது.
இப்பண்டிகை அன்றும் அதற்கு முதல் நாளுமாக இரு நாட்கள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் வீட்டை சுத்தம் செய்து பண்டிகை கொண்டாடுவதற்காக ஆயத்தம் செய்வார்கள்.
பண்டிகை அன்று தலைக்கு மருத்துநீர் வைத்து தோய்ந்து புத்தாடை அணிந்து கோவிலுக்குச் செல்வார்கள்.
புத்தாண்டு பிறக்கும் நேரம் பட்டாசுகள் கொழுத்தி மகிழ்வர்.
வீடுகளில் பொங்கல் செய்து வழிபாட்டறையில் தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை போன்ற மங்கலப் பொருட்களுடன் வைத்து கடவுளுக்குப் படைத்து உண்பார்கள்.
பலகாரங்கள் செய்து உறவினருக்கும் அயலவர்க்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.
சித்திரை வருடப்பிறப்பன்று குறித்த நல்ல நேரத்தில் வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றவர்களுக்கு பணம், கைவிசேடமாகக் கொடுத்து ஆசிர்வதிப்பர்.
பண்டிகை அன்று போர்த் தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், முட்டி உடைத்தல், கிளித்தட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்வர்.
ஏனையோருக்கு உதவுதல், ஒற்றுமை, பொறுமை, பெரியோரை மதித்தல் போன்ற நற்குணங்களை பெறுவதற்கு பண்டிகைகள் வழிவகுக்கின்றன.
*****