
“நம்மிடம் சொல்லும் பொய்யை விட வருத்தம் தருவது, நாம் அந்த உண்மையைப் பெற தகுதியற்றவர்கள் என்ற அவர்களின் எண்ணம் தான்.”
*****
“அச்சம் என்பது உங்களை நீங்களே தோற்கடித்துக்கொள்ளப் பயன்படுத்தும் ஆயுதம்.
அச்சத்தை துரத்தவேண்டும் என்று நினைக்காதீர்கள்.
அச்சத்தை உருவாக்காமல் இருக்கமுடியுமா என்று பாருங்கள்.”
*****
“நல்ல மனிதர்களோடு நட்பு வைத்திரு.
நல்ல மனிதர்களின் சாயலை அடைவாய்.”
*****
“கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதைவிட,
இலட்சியத்தை நினைத்து கண்ணீர் சிந்துங்கள்,
உங்களாலும் சாதிக்க முடியும்.”
*****
” நம் சிந்தனைக்கும்
செயலுக்கும்
எவ்வளவு தூரம் உள்ளது ….
அது தான் நமக்கும்
வெற்றிக்கும்
உள்ள தூரம்….!!!”
*****
“பணம் இன்று வரும், நாளை வந்தவழி சென்றுவிடும்.
ஆனால் பாசம் என்றும் நிலையானது. பணத்துக்காய் பாசத்தை விற்றுவிடாதீர்கள். மீண்டும் கிடைப்பது கடினம்.”
*****
“கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!
1. பொருட்படுத்தாதீர்கள். உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.
2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள். ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள். தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.
4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள். பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.”
*****