நீ அருகில் இருக்கும்போது
புரியவில்லை உனது அருமை…
குறை கண்டேன் குற்றம் படித்தேன்
அலட்சியப்படுத்தினேன்
அவமானம் செய்தேன்…
நீ விலகிச் சென்றபோது…
தீயிலிட்ட புழுவைப் போல
துடிகின்றேன் என் அன்பே!
சுற்றிப் பல உறவுகள் இருந்தாலும்
தனிமையாய் உணர்கின்றேன்…
பசியின்றி உறக்கமின்றி
உயிர்ப்பின்றித் திரிகின்றேன்…
புரிந்துவிட்டது எனக்கு…
நீதான்
எனது சக்தி எனது பலம்
எனது வழிகாட்டி எனது மகிழ்ச்சி…
நீயின்றி நானில்லை
அகங்காரம் துறந்து அழைக்கின்றேன்
விரைந்து வா சகியே!!!