கழிவுகளை உரங்களாக மாற்றும்
இந்த பூமியில்
மனிதா!
ஏன் இன்னும் சுமந்துகொண்டிருகின்றாய்
மனதில் கழிவுகளை…
மாற்றம் தானாக வருவதில்லை…
தீயவற்றை அழி
நல்லவற்றை ஏற்று
உன்னைச் சுற்றியிருக்கும் உயிர்களிடத்து
அன்பைக் கொட்டிப்பார்
உன் மனம்
பூஞ்சோலையாக மாறும் விந்தையை
நீ உணர்வாய்
ஆதலினால்
அன்பு செலுத்துவோம் வாரீர்