கணவனின் குறிப்பறிந்து நடப்பவள்
அவளே தாய்
பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பவள்
அவளே தாய்
இல்லத்திலே கடமைகளைச் சினக்காமல் செய்பவள்
அவளே தாய்
சுற்றியிருப்பவர்களின் மனம் நோகாமல் நடப்பவள்
அவளே தாய்
உதவி கேட்பவர்களுக்கு இயன்றதைச் செய்பவள்
அவளே தாய்
குழந்தைகளைப் பெற்றெடுப்பதால் மட்டும்
தாயாக முடியாது
கடமைகளையும் ஒழுங்காகச் செய்பவளே
தாயாவாள்