சமுதாயம் சீரழிகிறது
ஏன் இன்னும் அமைதியாக இருக்கின்றாய்
உன்னைச் சுற்றியிருப்பவர்களை பார்…
கண்ணிருந்தும் குருடனாக இருக்காதே
காணும் பிழைகளை
திருத்த முயற்சிசெய்
வாயிருந்தும் ஊமையாக இருக்காதே
நடக்கும் அநியாயங்களைத்
தட்டிக் கேள்
காதிருந்தும் செவிடனாக இருக்காதே
உதவி கேட்பவர்களுக்கு
உன்னால் முடிந்ததைச் செய்
உன்னை ஊனமின்றி
படைத்த இறைவனுக்கு
நீ செய்யும் நன்றிக்கடன் இது…