அறியாமல் இருந்தேன்
அவளது விழிகளின் மொழியை …
அறிந்துகொண்டேன்
அவள் இதழ் விரித்து சிரித்தபோது…!!!
அறியாமல் இருந்தேன்
அவளது இதயத்தின் ஆழத்தை…
அறிந்துகொண்டேன்
அதில் விழுந்து தொலைந்தபோது…!!!
அறியாமல் இருந்தேன்
அவளது காதலின் வேகத்தை…
அறிந்துகொண்டேன்
அதில் சிக்கித் தவித்தபோது…!!!