நம் பார்வைகள் மோதி
பின்னிப் பிணையும்
தருணங்களை
நேசிக்கிறேன்…
அக்கணங்களில்
உன்னில் தெரியும்
அற்புதமான மாற்றங்களை
ரசிக்கிறேன்…
காதலின் ஆரம்பம்
இன்பமான
இவ்வுணர்வுகளோ
யோசிக்கிறேன்…
என்னுள் முளைத்த
காதல் செடிக்கு
உயிரூட்ட – உன்னிடம்
காதல் மழையை
யாசிக்கிறேன்…