ஒரு தலையாய் காதலித்தவன்
ஈருயிர் ஓருடல் என்றவன்
மூன்று எழுத்து மந்திரத்தை
நாலே நாளில் புகுத்தியவன்
ஐந்து திங்கள் அன்பை பொழிந்தவன்
ஆறாவது அறிவை மழுங்கடித்தவன்
ஏழு ஜென்மத்துக்கும் நீயே என்றவன்
எட்டுத்திக்கும் செல்வோம் என்றவன்
ஒன்பது கோள்களும் துணையிருக்கும் என்றவன்
பூஜ்யமாய் மறைந்து போனான்…!!!
ஆடம்பரத்தில் மயங்கியவன்
அவளின்
உண்மைநிலை அறிந்தபின்னே…