வண்டினத்தை கவர்ந்திழுத்து
தேன் சிந்தும் மலர்களே!
தென்றலோடு கூடி ஆடி
வாசம் வீசும் மலர்களே!
என் உள்ளத்தின் நாயகனை
கவரும் வழி சொல்வீர்களா…
என் காதலுக்கு
துணையாக வருவீர்களா…
வான்மீதில் மிதந்து சென்று
கூடி மகிழும் மேகங்களே!
காதலோடு வெண்ணிலாவை
தழுவிச்செல்லும் மேகங்களே!
என் இதயத்தின் அரசனை
சேரும் வழி சொல்வீர்களா…
என் காதலுக்கு
தூது சொல்ல செல்வீர்களா…