நொடிகள் மணிகளாகின்றன
உனக்காக காத்திருக்கும்போது…
மணிகள் நொடிகளாகின்றன
நீ அருகிலிருக்கும்போது…
நிலவு சுட்டெரிக்கின்றது
உன்னை பிரிந்திருக்கும்போது…
கதிரவன் குளிர்மை தருகின்றது
நீ அருகிலிருக்கும்போது…
சுற்றம் அழுதுவடிகின்றது
உனது விலகலின்போது…
சூழல் அழகாகின்றது
நீ நெருங்கிவரும்போது…
என் உணர்வுகளை ஆட்சி செய்யும் பெண்ணே!
என் உள்ளத்தை ஆட்சி செய்ய வருவாயா கண்ணே!!!