தற்போது அதிகரித்துவரும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுதலுக்கு காரணம் பணம் படைத்த தாய்மார்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரே என்பது எனது கருத்தாகும்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவதற்கு இயற்கையாக பல காரணங்கள் உள்ளன. இதய பலவீனம், குழந்தை திரும்பாமல் குறுக்கே இருப்பது, கால்களால் பிறப்பது – கால்கள் முதலில் வெளிவருவது, நஞ்சுக்கொடி சுற்றியிருப்பது, போன்ற காரணங்கள் அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்கின்றன. அத்துடன் சில பணத்தாசை கொண்ட மருத்துவர்களும் அறுவை சிகிச்சையை ஊக்குவிக்கின்றனர். இவை தவிர்க்கமுடியாத காரணங்களாகும்.
பெரும்பாலான பெண்களும் குடும்பத்தினரும் சுக பிரசவத்தையே விரும்புவர். முதலில் கஷ்டப்பட்டாலும் பிறகு வரும் காலத்தில் சுகமாக இருக்கலாம், எத்தனை பிள்ளைகளையும் பெறலாம், கஷ்டமான வேலைகளையும் செய்யலாம், செலவு இல்லை என்ற உண்மையே காரணம்.
ஆனால் தற்போது வசதி படைத்தவர்கள் அறுவை சிகிச்சையை நாடுவது சுயநலத்துக்காக.
வலியின்றி குழந்தை பெறுவதற்கு
நல்ல நாள், நட்சத்திரம், எண் பார்த்து குழந்தை பெறுவதற்கு
குடும்பத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு
இப்படியாக குழந்தை பிறக்கவேண்டிய நாளை அவர்களே தீர்மானித்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுகிறார்கள். அதிகரித்து வரும் அறுவை சிகிச்சைக்கு இவர்களே காரணமாவர் என்பது எனது கருத்து.