மலரும் இனிய நினைவுகள்
மனதில் நிரையாய் வருகுதே
மகிழ்ச்சிதன்னைத் தருகுதே
மனதில் ஏக்கம் பரவுதே…
குழந்தைகளாய் இருந்தபோது
கூடி ஓடி விளையாடினோம்
குடும்பத்துடன் பழகினோம்
குதூகலமாய் வாழ்ந்திருந்தோம்…
இன மொழி பேதமின்றி
இணைபிரியா நண்பர்களாய்
இடர் நேரும் பொழுதிலெல்லாம்
இங்கிதமாய் உதவி செய்தோம்…
பண்டிகை நாட்களிலே
பலகாரங்கள் பரிமாறினோம்
பரிசுப்பொருட்கள் கொடுத்து வாங்கி
பண்புடனே கொண்டாடினோம்…
இடைப்பட்ட காலவெளியில்
இரக்கமற்ற செயல்களால்
இரத்த ஆறு ஓடியது
இருள் மேகம் மூடியது…
மெல்ல மெல்ல கருமுகில்கள்
கலைந்து மறைந்து செல்கின்றன
மனம் போல வாழ்ந்த வாழ்க்கை
மீண்டும் திரும்பி வந்திடுமா…!!!