உன்னை நினைத்ததும்
பொங்கும் உள்ளம்…
என் நினைவுகளில் புகுந்த
அலை நீ…
உன் குரல் கேட்டதும்
பரவசமாகும் உள்ளம்…
என்னுள் பரவிய
இன்னிசை நீ…
உன்னை பார்த்ததும்
மயங்கும் உள்ளம்…
என்னுள் மாயம் செய்யும்
வசியக்காரன் நீ…
உனது விலகலில்
சூனியமாகும் உள்ளம்…
என்னை கடத்திச் செல்லும்
கள்வன் நீ…
எனக்கு உயிரைக் கொடுத்து
மலரச் செய்யும்
சூரியன் நீ…
என் உயிரில் கலந்த
காதலன் நீ
கண்ணா…