பிறர் பொருளில்
ஆசை வேண்டாம்
எம்மிடம் இருப்பதில்
திருப்தி கொள்வோம்…
பிறர் உயர்வில்
பொறாமை வேண்டாம்
நம் உயர்வுக்கு
முயற்சி செய்வோம்…
பிறர் தயவில்
வாழ வேண்டாம்
உழைத்து வாழ
பாடுபடுவோம்…
பிறர் துன்பத்தில்
இன்பம் வேண்டாம்
தோள் கொடுத்து
ஆறுதல் தருவோம்…
அன்பை கொடுத்து
பண்புடன் பழகி
வெற்றி காண்போம்
மகிழ்வாய் வாழ்வோம்…