மான்விழியால் மயக்கிவிட்டாள்
மந்திரத்தால் கட்டிவிட்டாள்…
மின்னலென புகுந்துவிட்டாள்
மலர்க்கொடியாய் படர்ந்துவிட்டாள்…
மனம் முழுதும் நிறைந்துவிட்டாள்
மகிழ்வை வாரி இறைத்துவிட்டாள்…
மோகத்தீயை வளர்த்து உள்ளே
மதுரையாட்சி தொடங்கிவிட்டாள்…
மங்கையவள் – என்
மணவாட்டி அவள்…!!!