உன்னைப் பார்த்ததும்
இதயம் வரையும் கவிதைகள்
காத்திருக்கின்றன
உன் புன்னகைக்காக…
புது உலகம் அழைத்துச் சென்று
என் காதலை எடுத்துச் சொல்ல
காத்திருக்கின்றன
உன் புன்னகைக்காக…
தூக்கத்தைத் துரத்தி
நீ செய்யும் குறும்புகளைச் சொல்ல
காத்திருக்கின்றன
உன் புன்னகைக்காக…
சிந்தையிலே நிறைந்திருந்து
கோலோச்சும் உனதழகைச் சொல்ல
காத்திருக்கின்றன
உன் புன்னகைக்காக…