கட்டுப்பாடற்ற உணவு முறைகள், துரித உணவு வகைகள், எமது நாட்டு காலநிலைக்கு ஒவ்வாத உணவு வகைகள் என்பன மக்களுக்கு பலவித, புதுப்புது நோய்களைத் தருகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதோடு எளிதாக தொற்று நோய்களாலும் பாதிக்கப்படுகிறார்கள்.
வீடுகளிலும் சுலபமான சமையல் முறை – மிக்ஸி, கிரைண்டர், குக்கர் …
அருகே செல்வதற்கும் வாகனங்கள் பயன்படுத்துகிறார்கள்.
எனவே இயற்கையாகவே கிடைக்கும் உடற்பயிற்சியும் இல்லை.
இப்போது மக்கள் தங்கள் பிழைகளை உணர்கிறார்கள். துரித உணவு வகைகளை தவிர்த்து முறையாக சமைத்து உண்ண ஆரம்பிக்கிறார்கள். உடற்பயிற்சி செய்கிறார்கள். தியானம் செய்வதற்கு நேரம் ஒதுக்குகிறார்கள்.
எனவே மக்களுக்கு விழிப்புணர்வு வந்து யோகா கற்கிறார்கள் என்பது உண்மை.
பணம் சம்பாதிக்கும் நோக்கில் யோகா மையங்கள் உருவாகி வருகின்றன என்பதும் உண்மை.
சரியான முறையில் யோகா கற்பிக்கிறார்களா என்று ஆராய்ந்து செல்லவேண்டியது மக்களின் பொறுப்பாகும்.