பெண்ணவளை
நினைக்கும்போதெல்லாம்
உள்ளம் பொங்குவதும்
உவகை பெருகுவதும்
ஏன்…
காணும்போதெல்லாம்
பார்வைகள் அலைபாய்வதும்
வார்த்தைகள் தடுமாறுவதும்
ஏன்…
அருகில் வரும்போதெல்லாம்
மின்னலைகள் மேனியெங்கும்
காந்த அலைகள் உணர்வுகளிலும்
பரவுவது ஏன்…
காதல் உலகம்
என்னைக் கடத்திவிட்டதா!!!