உதிரத்துடிக்கும் வார்த்தைகள்
புண்ணாக்குமா பிறர் மனதை…
செய்யத்துடிக்கும் செயல்கள்
தடுக்குமா பிறர் உயர்வை…
செல்லத்துடிக்கும் பாதை
அழிக்குமா பிறர் வாழ்வை…
அந்த
ஒரு நொடி போதும்
எமைக் காக்க…
எமது
ஒவ்வொரு செயலும்
விளைவு தரும்
எமக்கு…
நினைவில் வைப்போம்
செயற்படுவோம்…
செய்வோம் நல்லதை
மனதிலிருந்து…
பெறுவோம் நன்மை
வாழ்விலிருந்து…
அழிப்போம் தீயதை
நினைவிலிருந்து…
காப்போம் எம்மை
அழிவிலிருந்து…