புதிய ஆண்டின் முதல் பக்கத்தில்…
இயற்கையுடன் சமாதான உடன்படிக்கை எழுதுகின்றேன்.
இயற்கையுடன் இணைந்து வாழ்வேன்.
பசுமையை பாதுகாப்பேன்.
சுற்றுச் சூழல் மாசடைவதை தவிர்ப்பேன்.
நீர் வீணாவதை தடுப்பேன்.
அராஜகத்தை காணுமிடத்தில் தட்டிக் கேட்பேன்.
இறைவனிடம் கோரிக்கை வைக்கின்றேன்.
பொறுப்பற்று திரியும் கணவன் மனைவிக்கு குழந்தைப் பாக்கியம் கொடுத்துவிடாதே.
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான வாழ்வுக்கு வழி காட்டிடு.
புத்தாண்டே! அடுத்துவரும் உனது பக்கங்கள் புதிய சரிதம் படைத்திட உன்னை வாழ்த்தி வரவேற்கிறேன் .