உள்ளத்தை சுற்றி
ஆயிரம் தளைகள்…
தகர்த்துவிட்டாய்
அனைத்தையும்…
கைப்பற்றிவிட்டாய்
ஆட்சியை…
பெண்ணே!
உனது விடாமுயற்சி
பாராட்டச் சொல்கிறது…
உனது வீரம்
வியக்கச் செய்கிறது…
உனது திறமை
மயக்கம் தருகிறது…
ஆனால்
பூவே!
உனக்குரிய இடம் இதுவல்ல…
பொருந்தாத இடத்தில் படர்ந்தால்
மலருமுன் கருகிவிடுவாய்…
விரைந்து வெளியேறிடு
உன்னை மட்டுமல்ல
என்னையும் காத்திட…
புதிய பாதை அமைத்திடு
இனிதே
புதிய பயணம் தொடங்கிடு…