அயராது விழித்து
கற்றிடுவேன்
ஓயாது உழைத்து
முன்னேறிடுவேன்
துணையாக உந்தன் காதலிருந்தால்…
துன்பம் நேர்கையில்
தாங்கிடுவேன்
சோதனை வருகையில்
தாண்டிடுவேன்
துணையாக உந்தன் காதலிருந்தால்…
தடைகளை தகர்த்து
எறிந்திடுவேன்
சதிகளை மதியால்
அழித்திடுவேன்
துணையாக உந்தன் காதலிருந்தால்…
தோல்வியை பாடமாய்
நினைத்திடுவேன்
முயற்சியை விடாது
பற்றிடுவேன்
துணையாக உந்தன் காதலிருந்தால்…
சிகரம் தொட்டு வென்றிடுவேன்
வாழ்வை
உன் இதயம் தொட்டு வென்றிடுவேன்
உலகை
துணையாக உந்தன் காதலிருந்தால்…