உன் இதழ்கள் உதிர்க்கும்
வார்த்தைகள்
நினைக்கையில்…
கவலையின்போது
ஆறுதல் தருகிறது…
மகிழ்வின்போது
கூட்டுச் சேர்கிறது…
சோரும்போது
உற்சாகம் தருகிறது…
தூக்கமின்மையின்போது
தாலாட்டு பாடுகிறது…
பசியின்போது
சக்தி தருகிறது…
தோல்வியின்போது
நம்பிக்கை தருகிறது…
அன்புக்காகத் தவிக்கையில்
காதல் சொல்கிறதே…!!!
அந்த வார்த்தைகள் மட்டும்
உன் இதயத்திலிருந்து வருகிறதோ!!!