என் இதயத்துள் நுழைந்து
ஒருமுறை
சுற்றிவா பெண்ணே
என் காதலின்
தீவிரம் அறிவதற்கு…
எங்கும் காண்பாய்
தினம் காணும்
உன் உருவம்
வண்ண வண்ண ஓவியமாய்…
எதிர்கால கனவுகளின்
பதிவுகள்
சித்திரமாய்…
இடையிடையே
காதலை சொல்லும்
கவிதை வரிகள்…
உயிர்ப்படைய காத்திருக்கின்றன
யாவுமே
உனது
அங்கீகாரத்திற்காக…!!!