பிறரின் உயர்வு கண்டு
பொறாமை கொண்டு
தடுக்கும் முயற்சி
பாதாளத்தில் தள்ளிவிடும்
எம்மை…
அதே முயற்சியை
எம் உயர்வுக்கு பயன்படுத்தின்
உச்சம் தொடுவது
உறுதி…
அடுத்தவர் துயர் கண்டு
ஆனந்தம் கொண்டு
அடையும் திருப்தி
உதவியின்றி இன்னலில் சுழலவிடும்
எம்மை…
உதவாவிடினும்
உணர்ந்து கூறும் ஆறுதல் வார்த்தைகள்
நாம் துயருறும் வேளையில்
ஆறுதல் தருவது
உறுதி…
இன்பமும் துன்பமும்
மாறி மாறி வருவதே
வாழ்க்கைப் பயணம்…
புரிந்து வாழ்வோம்…