“உங்களுக்கே நீங்கள் உண்மையாக நடந்துகொள்ளுங்கள். அப்படி நடந்துகொண்டால் போதும். பிறரிடமும் உண்மையாக நடந்துகொள்வீர்கள்.
உண்மையே பேசுங்கள். ஆனால் நீங்கள் பேசுவது பிறரை காயப்படுத்தும் வகையில் இருக்கவேண்டாம்.
நீங்கள் பேசும் உண்மை பிறருக்கு மகிழ்ச்சியை கொண்டுவர வேண்டும்.”
“எந்த ஒரு காரியத்தையும் உன்னால் செய்யமுடியும் என்பது ‘தன்னம்பிக்கை’.
உன்னால் மட்டும்தான் செய்யமுடியும் என்பது ‘கர்வம்’.
அதை வெளியில் சொல்வது ‘திமிர்’.”
“உள்ளம் என்பது கவலைகளை நிரப்பும் குப்பைத் தொட்டி அல்ல….
அழகிய எண்ணங்களை இனிதாய் நிரப்பும் பூந்தொட்டி.”
“குறைகாணும் மனப்பான்மையும், அனுசரிக்க மறுக்கும் பிடிவாதமும், ‘நானே சரி’ என நினைக்கும் தன்முனைப்பும் திருமண வாழ்வை நீர்த்துப்போகச் செய்கின்றன.
கணவன் மனைவி, பரஸ்பரம் தங்களுக்குள் குறைகாணும் மனப்பான்மையை வளர்த்தால், அது குடும்பம் என்ற அமைப்பையே குலையச் செய்துவிடும்.”