அன்பு அரவணைப்பு
ஆகாரம் பாதுகாப்பு
கல்வி வழிநடத்தல்
தருவது
பெற்றோர்…
பொறுப்பான பெற்றோரை
பெறும் குழந்தை
நல்லவனாய் வளர்வது
நிச்சயம்…
கல்வி ஒழுக்கம்
புகட்டுவது
ஆசிரியர்…
நல்லாசிரியரை
பெறும் பிள்ளை
வல்லவனாய் வளர்வது
நிச்சயம்…
நல்ல பழக்கங்களுடன்
நேரான பாதையில்
அழைத்துச் செல்வது
நட்பு…
நல்ல நட்பை
பெறும் இளைஞன்
வாழ்வில் சிறந்தவனாவது
நிச்சயம்…