“இரவுக்கு வேண்டிய உணவை பகல் வேளையிலும்,
மழைக்காலத்துக்கு தேவையான பொருட்களை மற்ற காலங்களிலும்,
முதுமைக்குத் தேவையானதை இளமையிலும்
சேமித்து வைக்கவேண்டும். அதுபோன்றுதான் மறுமைக்கு வேண்டிய புண்ணியத்தை இம்மையிலேயே சேர்த்துக்கொள்ள வேண்டும்.”
“இறைவனிடம் அசைக்கமுடியாத, அழுத்தமான நம்பிக்கை;
உங்கள் மீதும் அதே அளவான நம்பிக்கை;
சொற்கள் குறைந்த இதயபூர்வமான பிரார்த்தனை.
இவையே எமக்கு,
மன அமைதி,
மகிழ்ச்சி,
நாளைய பற்றிய நம்பிக்கை
என்பவற்றைத் தருகின்றன.”
“ஒவ்வொரு மனிதனுக்கும் இலக்கு இருக்க வேண்டும்.
இலக்கு மட்டும் இருந்தால் போதாது.
அந்த இலக்கை அடைவதற்கு கடின முயற்சியும் அதோடு தேடலும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மனிதனுக்கு பலம் நம்பிக்கை.
என்னால் முடியும் என்ற கொள்கையை வளருங்கள்.
உங்கள் கனவு என்னவாக இருந்தாலும் ஒரு நாள் நனவு ஆகும்.”
“சிக்கனம் என்பது எவ்வளவு குறைவாக செலவு செய்கிறோம் என்பதில் இல்லை.
எவ்வளவு உபயோகமாக செலவு செய்கிறோம் என்பதிலேயே உள்ளது.”