புழுங்கல் அரிசி (குத்தரிசி) – 1 கப்
மைசூர் பருப்பு – 1/4 கப்
கத்தரிக்காய் – 1
வாழைக்காய் – 1
உருளைக்கிழங்கு – 1
பூசணிக்காய் – 200 கிராம்
பைத்தங்காய் – 50 கிராம்
மரவள்ளிக் கிழங்கு – 1 சிறியது
தக்காளிப்பழம் – 1
வெங்காயம், பூடு, கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு, புளி – தேவையான அளவு
மிளகாய்த் தூள், மல்லித் தூள் – தேவையான அளவு
மிளகு தூள் – சிறிதளவு
தேங்காய்ப் பால் – 1 கப்
காய்கறிகளையும் வெங்காயத்தையும் கழுவி சிறு சிறு துண்டுகளாக, ஒன்றாக வெட்டி வைக்கவும்.
பூடு நசித்து வைக்கவும்.
புளி கரைத்து வைக்கவும்.
அரிசியையும் பருப்பையும் ஒன்றாக கழுவி, அளவான நீர் விட்டு அவிய விடவும். இவை அரைப்பதம் வெந்ததும், தயாராக வைத்திருக்கும் யாவற்றையும் சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும். இடையிடையே அடிப்பிடிக்காவண்ணம் கிளர வேண்டும். குழைந்த பதமாக சாதம் வந்ததும் இறக்கவும்.
இந்த கறி சாதத்தை பொரித்து வைத்த வத்தல் மிளகாய், தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காத சத்தான உணவு. அவசரத்திற்கு இலகுவாக சமைக்கலாம்.