“தொழிலில் வெற்றிபெற நீங்கள் செய்யும் தொழில் உங்கள் மனதிற்குப் பிடித்திருக்க வேண்டும்.
அப்போதுதான் அதில் முழுமையாக ஈடுபட்டு வெற்றிபெற முடியும்.”
***
“முயற்சி செய்து தோற்றாலும் அது ஒருவகை வெற்றிதான்.
முயற்சி செய்யாமலே வென்றாலும் அது ஒருவகை தோல்விதான்.”
***
“அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடையது அல்ல.
உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்துவிட்டாயானால், அதன் பிறகு நீ செய்யவேண்டியது எதுவும் இல்லை.
கைகளைக் குவித்தவண்ணம் சரணடைந்துவிடு.
பாதையின் வேகமே உன்னை உனது லட்சியத்தில் சேர்த்துவிடும்.”
***
“நம்மையும் மீறிய இழப்புகளை எதிர்கொள்கிற பக்குவம் நமக்குத் தேவை.
தேவையற்ற பயம், அவசியமற்ற கவலை, அடுத்தவரின் கருத்துகளுக்கு அதிக மதிப்பு கொடுக்கின்ற மனப்பான்மை ஆகியவற்றை முழுவதுமாகக் களைய முடியாவிட்டாலும், அவற்றை உதிர்க்கவாவது கற்றுக்கொள்வதே மகிழ்ச்சியை நம்முள் முழுமையாக மலரச் செய்யும்.
மகிழ்ச்சியின் மையப்பகுதி, நம் உள்ளத்தில்தான் உள்ளது.”
***