தேவையானவை:
கறிமிளகாய் – 5
பெரிய வெங்காயம் – 1
மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
தேங்காய்ப் பால் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கறி மிளகாய்களின் அடியில் கீழிருந்து மேல் நோக்கி சிறிது தூரத்திற்கு கத்தியால் கீறி, உள்ளிருக்கும் விதைகளை அகற்றி வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனுடன் மிளகாய்த்தூளையும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கையால் சிறிது கசக்கி கலக்கவும்.
கறிமிளகாய்களின் கீறிய பகுதிக்குள் இந்த கலவையை அடைய வேண்டும்.
காய்ந்த பாத்திரத்தில் இவற்றை அடுக்கி, தேங்காய்ப் பால், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி, அடுப்பில் வைத்து கொதித்ததும் திறந்து மெதுவாக பிரட்டி மீண்டும் கொதிக்க வைத்து சிறிது வறண்டதும் இறக்கவும்.
சுவையான கறிமிளகாய் கறி தயார்.