“தூணைப் பிடித்துக்கொண்டிருக்கும் பாலகன், கீழே விழுந்து விடுவோம் என்ற பயம் கொஞ்சமும் இல்லாமல், கனவேகத்துடன் அதைச் சுற்றிச் சுற்றி வருகிறான்.
அதுபோலவே, இறைவனிடம் மனதைத் திடமாக நிறுத்திவிட்டு, நீ உனது காரியங்களைச் செய். அப்போது உனக்கு அபாயங்களே நேரமாட்டா.”
*****
“முதலில் இறைவனைப் பற்றிய ஞானத்தால் உனக்குப் பாதுகாப்பை உண்டாக்கிக்கொள்.
பிறகு செல்வம் முதலான உலகப் பொருள்களின் இடையே நீ வசித்தால், அவைகளில் நீ எவ்வழியிலும் வசப்பட மாட்டாய்.”
*****
“வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு.
இம் மாயத்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய்.
தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.”
*****
“பொருளில் தன்னைவிடக் கீழோரையும்,
அறத்தில் தன்னைவிட மேலோரையும்,
இன்பத்தில் தன்னை ஒத்தோரையும் வைத்து
நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.”
*****
“எமக்கு எதிராக முரண்பட்டு வன்முறைகளைக் கையாளும் நபருக்கு, மீளவும் நாம் வன்முறைகளைக் கையாண்டு பாதிப்புக்களை ஏற்படுத்தச் சிந்திக்காது, அவரை எப்படி நல்ல நிலைக்கு, மன்னித்து, மனிதராக மாற்றலாம் என்று சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு சிந்திக்காவிட்டால், வன்முறையாளர்களைப் பெருக்கிக்கொள்வோமே தவிர நல்ல மனிதர்களை உருவாக்கிக்கொள்ள முடியாது.”
*****