“வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடமையைச் செய்வோம்.
யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம்.
நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”
*****
“ஒவ்வொரு நாளையும் அன்போடு ஆரம்பியுங்கள்.
ஒவ்வொரு நாளையும் அன்பினால் நிரப்புங்கள்.
ஒவ்வொரு நாளையும் அன்போடு முடியுங்கள்.
இந்த உலகை ஆள்வது அன்புதான்.
அன்பின் சக்திக்கு இணையாக இன்னொன்றைச் சொல்ல முடியாது.”
*****
“யாருக்காவது ஆலோசனை கூறும்போது, உதவி செய்யும் நோக்கத்தோடு சொல்.
திருப்தி செய்யும் நோக்கத்தோடு சொல்லாதே.”
*****
“மனிதனாகப் பிறந்தவனுக்கு எந்தப் பிரைச்சனைகளையும் தாங்கும் மனப்பாங்கு இருக்க வேண்டும்.
இன்பமும் துன்பமும் கலந்துள்ள மனிதப் பிறவியிலே துன்பம்தான் பெரும் பகுதியாக காணப்படுகிறது. அத்துன்பத்தை எதிர்கொண்டு வாழ்பவனே வெற்றி பெறுகிறான்.
மற்றும் தான் செய்த தவறை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும். இவ்வாறு ஏற்றுக்கொண்டால் மனிதர்கள் எச்சூல்நிலை வந்தாலும் விரக்தி அடையாது உடல் – உள நலனை பாதுகாத்து வாழமுடியும்.”
*****