இதமான தருணம்

குளிரும் நிலவாக
மின்னும் தாரகையாக
தவழும் தென்றலாக
அழகு மலராக
மயக்கும் தேவதையாக
ஆளும் அரசியாக
என்னுள் நீ!!!
குளிரும் நிலவாக
மின்னும் தாரகையாக
தவழும் தென்றலாக
அழகு மலராக
மயக்கும் தேவதையாக
ஆளும் அரசியாக
என்னுள் நீ!!!
தடுமாறச் செய்து
தடம் மாறச் செய்கின்றது
உன்
கடைக்கண் பார்வை…
காலையில் மென்மையாய் அணைத்து
இதம் தருகின்றாய்
மதியம் இறுக அணைத்து
வாடச் செய்கின்றாய்
மாலையில் அணைப்பை தளர்த்தி
மறைந்து போகின்றாய்
மறவாமல் மறுநாள் காலையில்
மீண்டும் வருகின்றாய்…
ஆதவன் வருவதும்
பூமகள் மலர்வதும்
இயற்கை வரைந்த
சட்டம்…
துன்பங்களையும் தோல்விகளையும்
தந்தாலும்
இன்பங்களையும் வெற்றிகளையும்
தர மறக்காத
ஆண்டே!
என்னுள் மூழ்கி
கண்டெடுத்தாய் காதல் முத்து…
சிவந்த கன்னங்கள்
றோஜா இதழ்கள்
Continue reading →மலரில் இருந்து சிரிக்கிறாய்
நிலவில் இருந்து குளிர்மை தருகிறாய்
உன் பார்வையில்
மலர்ந்த இதயம்
தடம் புரண்டு
இடம் மாறியது
உன் புன்னகையில்!!!
விழிகள் உரசி
பற்றிய காதலில்
இதயம் உருகி
நீயானாய்…