பெண்ணாலே…

பெண்ணாய் பிறந்ததில்
பெருமை கொள்வோம்
நற்பண்புகள் கொண்டு
வாழ்ந்திடுவோம்…
பெண்ணாய் பிறந்ததில்
பெருமை கொள்வோம்
நற்பண்புகள் கொண்டு
வாழ்ந்திடுவோம்…
உனது
உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அன்பில்
கலந்திருப்பதை
கண்டேன்…
காத்திருந்து பார்த்திருந்து
வறட்சியானது
மண் மட்டுமல்ல
விழிகளும் தான்…
அமைதியில் அழகைப் பார்த்து ரசிக்கின்றேன்
கோபத்தில் சீற்றம் கண்டு மலைக்கின்றேன்
கொட்டிக்கிடக்கும் அதிசயம் நினைத்து வியக்கின்றேன்
மறைந்திருக்கும் இரகசியம் தேடி தவிக்கின்றேன்
புரியாத புதிராய் இருக்கும் அன்னையே!
உன்னை
பணிகின்றேன்
ஆராதிக்கின்றேன்
காதலிக்கின்றேன்!!!
உணவாக உதிரத்தை
உறிஞ்சியதை
நினைத்துப் பார்…
அக்கணமே அழிந்து போகும்
உணவுக்காய் அன்னையை
தவிக்கவைக்கும்
உன் எண்ணம்…
புன்னகையால் பிடித்து வைத்து
புது உலகம் அழைத்துச் சென்றாய்…
கண்ணசைவால் காதல் சொல்லி
சொர்க்கத்தை காட்டிவிட்டாய்…
பெண்ணே!
ஒற்றைப் பார்வையில்
என் உயிருடன் கலந்து
உன்னைச் சுமக்கும்
பொறுப்பைத் தந்துவிட்டாய்…
கூட இருந்து
குழி பறிக்கும் கூட்டம்
இருக்கும் வரை
முன்னேற்றம்
கேள்விக்குறியே…