படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167

“சுற்றி இருப்பவர்கள் சொல்வதையெல்லாம்
கேட்டுக்கொள்…
கற்றுக்கொள்…
தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்.”
*****
Continue reading“சுற்றி இருப்பவர்கள் சொல்வதையெல்லாம்
கேட்டுக்கொள்…
கற்றுக்கொள்…
தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்.”
*****
Continue reading →“ஒரு நாள் பணக்கார
தந்தை அவரது மகனை வெளியூர்
கூட்டிச்சென்றார்.
அவரது மகனுக்கு ஏழைகள்
எப்படி வாழ்கிறார்கள்
என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழை குடும்பத்துடன் தங்கினர்.
2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு வீடு திரும்பினர்.
வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார்.
“அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா…? இந்த
சுற்றுலா இருந்து என்ன
கத்துக்கிட்ட? “
.
மகன் சொன்னான்…
” பாத்தேன்… நாம ஒரு நாய்
வச்சிருக்கோம்.. அவங்க 4
வச்சிருக்காங்க…
நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம்…
அவங்க கிட்ட நதி இருக்கு..
இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்..
. அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு…
சாப்டுறதுக்கு நாம கடைல பொருள்
வாங்குறோம்… அவங்க
அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க…
திருடங்க வராமே இருக்க நாம
வீடு சுத்தி செவுரு கட்டி இருக்கோம்…
அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் ,
நண்பர்கள் இருக்காங்க… “
.
.
தந்தை அவனையே வெறித்துக்
கொண்டிருக்க அவன் தொடர்ந்தான்…
” ரொம்ப நன்றி பா …. நாம
எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய
வச்சதுக்கு…”
”Money doesn’t make us rich”. ”
“தன்னம்பிக்கையும் விடா முயர்ச்சியும் ஒருவனுக்கு வெற்றியை தேடித்தரும்.”
*****
“பெண் என்பவள் எல்லையற்ற அன்பின் அவதாரம்.”
*****
“கடந்து போன நேரம் ஒரு போதும் திரும்புவதில்லை.”
*****
“பயிற்சி ஒரு மனிதனை தகுதியுடையவனாக்கும்.”
*****
“உலகில் மெளனம் தான் மிகப்பெரிய ஆயுதம்.”
*****
Continue reading →“ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவனது வழக்கம். ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில் பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார். அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. கோபம் கொண்ட அரசர் பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்.
Continue reading →“
ஒரு ஏழை ஒருவன் துறவியைப் பார்க்கச் சென்றான்.
அவரைப் பார்த்து,
“குருவே! நான் பெரும் ஏழை.
என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை.
நான் நல்ல வசதியுடன் வாழ ஒரு வழி சொல்லுங்கள்” என்று கேட்டான்.
Continue reading →“ஒரு பூ மலரும்போது சுற்றிலும் எப்படி நறுமணம் வீசுகிறதோ, அப்படித்தான் தியானமும்.
அது மலர்ந்துவிட்டால் சுற்றியுள்ள அனைவருக்கும் நறுமணம் வீசும்.”
*****
Continue reading →உயிர் காக்கும் தந்திரம்!
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”
“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.
அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.
நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.
நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.
*****
Continue reading →“வாழ்வின் இசை என்பதே பெண்களின் சிரிப்பில்தான் புதைந்து கிடக்கிறது.
பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில்தான் ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கியிருக்கிறது.”
*****
“நம்பிக்கை எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் தன்னம்பிக்கையை காப்பாற்றுவது.”
*****
Continue reading →“இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம், ஆனால் தாழ்ந்து போவதில்லை.
ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம், ஆனால் கடைசிவரை சாதிப்பதில்லை.”
*****
“நாக்கு ஒரு தீ.
ஆக்கவும் அழிக்கவும் வல்லது.
கவனமாகப் பயன்படுத்துங்கள்.”
*****
Continue reading →“ஒருவன் தன்னைத்தானே
நான் யார் என்று
சிந்திக்க ஆரம்பித்து விட்டால்
அவனுக்குள்
ஆன்மிகம் ஆரம்பித்துவிடும்.
அவன்
அவர்கள் யார் என்று
சித்திக்க ஆரம்பிப்பதால்தான்
அவனுக்குள்
உலக துன்பங்கள்
உள்ளுக்குள் வர ஆரம்பிக்கின்றன.