அன்பை மறந்து
ஓடி ஓடி
பொன்னும் பொருளும் சேர்த்து வைப்பதில்
பயன் ஏது…
துன்பம் சூழ்கையில்
ஆறுதல் தருவது
அன்பும் அரவணைப்புமே…
அதை தருவது
நட்பும் உற்றமும் சுற்றமுமே…
வளமோடு நலமாக வாழ
உழைத்து
அளவான பொருள் சேர்ப்போம்…
அன்போடு பண்போடு பழகி
அனைவரையும்
அன்பினால் கட்டி வைப்போம்…