முருகா!
மாறா ஔி சிந்தும் தங்கச் சூரியன்
நின் திருமுகம்…
மனக் கண்ணில் நிலை நிறுத்தி
வணங்குகின்றேன்
தினம்
நின்னை…
குமரா!
நறுமணம் கமழும் மலர்
நின் திருநாமம்…
எண்ணிலடங்கா மலர்கள்
சமர்ப்பிக்கின்றேன்
தினம்
நின் திருவடிகளில்…
ஏற்று
அருள் புரிந்திடு
வடிவேலனே!
என் சிந்தையில்
நிறைந்திருக்கும்
சரவணபவனே!