பூமகளின்
காவலர்கள்
சூரியன் சந்திரன்…
தோழியர்
காற்று மழை…
குழந்தைகள்
உயிரினங்கள்…
இயற்கை வரைந்திட்ட
ஓவியங்கள்!!!
ஓரறிவு முதல் ஐந்தறிவு உயிரினங்கள்
இயற்கையோடு இணைந்து வாழ
ஆறறிவு மனிதன் மட்டும்
இயற்கையை சீண்டுவதேன்
அதன் கோபத்தில் சிக்குவதேன்…
மனிதனின் சட்டம்
தண்டனை ஒருவனுக்கே…
இயற்கையின் சட்டம்
தண்டனை யாவருக்குமே!!!
அறிந்து வாழ்வோம்
சுகமே காண்போம்…