அம்மா!
உனது உதிரம்
எனது வளர்ச்சிக்கு உணவானது…
உனது வியர்வை
எனது முயற்சிக்கு நீரானது…
உனது அறிவுரைகள்
எனது உயர்வுக்கு அடித்தளமானது…
உனது அன்பு பாசம் அரவணைப்பு
எனது உழைப்புக்கு உரமானது…
பலனை எதிர்பாராது
மகவுக்காக
உன்னையே அர்ப்பணிக்கும் தாயே!
நீ ஒரு அற்புதப் பிறவி…