அறிவும் அன்பும் இணைந்தால் அழகு
அறிவும் செருக்கும் பிரிந்தால் அழகு…
செல்வமும் திருப்தியும் இணைந்தால் அழகு
செல்வமும் பேராசையும் பிரிந்தால் அழகு…
பதவியும் அடக்கமும் இணைந்தால் அழகு
பதவியும் ஆணவமும் பிரிந்தால் அழகு…
உழைப்பும் உண்மையும் இணைந்தால் அழகு
உழைப்பும் பொய்யும் பிரிந்தால் அழகு…
வாழ்க்கையும் பக்தியும் இணைந்தால் அழகு
வாழ்க்கையும் விரோதமும் பிரிந்தால் அழகு…