நித்திரைக்குச் செல்லும் ஆதவன்
வானத்தை முத்தமிட்டு சிவக்கச் செய்யும் அழகு…
வைரங்கள் சூடி முழு நிலா
வானிலே பவனி வரும் அழகு…
மேகங்கள் பொழிகையில் பூமகள்
பச்சைப்பட்டணிந்து மலரும் அழகு…
தவழ்ந்து வரும் தென்றலோடு மலர்கள்
அசைந்தாடும் அழகு…
பசியாறிய புள்ளினங்கள்
கானமிசைத்து பறந்து திரியும் அழகு…
அன்னையின் மடியிலே தவழும் மழலையின்
கள்ளமில்லா பொக்கை வாய் சிரிப்பு பேரழகு…!!!
அதன் இதழ்களும் விழிகளும் மட்டுமல்ல
கால்களும் கரங்களும் சொல்லும் கதைகளுமே பேரழகு!!!
தளிர் நடை பயில்கையில் சினத்தை அழைத்து வரும்
குறும்புகளோ தெவிட்டாத பேரழகு!!!