கூந்திலின் நீளம்
பின்னலின் நேர்த்தி
அழகுக்கு அழகு சேர்த்து
படர்ந்திருக்கும்
மலர்ச் சரம்…
இடையின் கீழ்
அசைந்தாடும்
கூந்தல் அழகினிலே
சொக்கிப் போய்
சிக்குண்டேன்!!!
பெண்ணே!
உன் முகம் பார்க்கவில்லை
உன் குணம் தெரியவில்லை
ஆனாலும்
என் உள்ளம் உன் பின்னே
விடுபட விருப்பின்றி…
உன் கூந்தலிலே
ஊஞ்சலாடும் என் உள்ளத்தை
உடைத்துவிடாதே…!!!
அது
இயற்கையல்ல செயற்கையென்று
கூறிவிடாதே!!!