பதவிக்கு ஆசைப்பட்டு
பண்பை இழக்காதீர்…
காசுக்காக ஆசைப்பட்டு
கண்ணியத்தை இழக்காதீர்…
சொத்துக்காக ஆசைப்பட்டு
சொந்தங்களை இழக்காதீர்…
மாதருக்காக ஆசைப்பட்டு
மானத்தை இழக்காதீர்…
உல்லாச வாழ்வுக்கு பேராசைப்பட்டு
உயிரையே இழக்காதீர்…!!!
ஆசைகள் வளர்ப்போம்
வாழ்வில் முன்னேற…
அவற்றை
கட்டுக்குள் வைத்திருப்போம்
மகிழ்வோடு வாழ…