
உன்னை கண்டதும்
இறக்கை முளைத்து பறக்கின்றது
என் இதயம் மட்டுமல்ல
கடிகார முட்களுமே…!!!
துணிவைத் திரட்டி
ஒரு வார்த்தை பேச நினைக்கையில்
காலத்தோடு
காணாமல் போய்விடுகிறாயே…
சூரியனே!
நேரத்தை கட்டிவைத்து
சிறிது நேரம் ஓய்வெடு…
தணியாத தாகத்தை தீர்த்திட
உதவிடு!!!