விடியும் பொழுதினிலே
காலை வணக்கம் கூறி
இனிதாக துயில் எழுப்பும்
புள்ளினங்களே நன்றி
காலைக்கடன் முடித்து
வெளியே வரும்போது
இதமாக தழுவிச் செல்லும்
தென்றலே நன்றி
பூமியதன் இருள் நீக்கி
ஒளிக்கரங்களால் எம்மை
அணைத்து வரவேற்கும்
பகலவனே நன்றி
நறுமணங்கள் பரப்பி
வண்ண வண்ண அழகு காட்டி
மலர்ச்சியுடன் வரவேற்கும்
மலர்களே நன்றி
தன் சுகம் பாராது
எல்லோர்க்கும் முன்பெழுந்து
காலை உணவுடன்
அன்பையும் சேர்த்து ஊட்டும்
அம்மா உனக்கு மட்டும்
எனது முத்தங்கள் கோடி கோடி