தடாகத்தில் பூத்திருக்கும்
தாமரை போல்
நீலப்பட்டாடையில்
மலர்ந்திருக்கும் பெண்ணே!
என் பார்வையிலே நீ
மலர்ந்தாயா…
உன் சூரியன் நானென
அறிந்தாயா…
நான் செல்லுமிடமெல்லாம்
திரும்புகின்றாய்…
உன் அழகால் என்னை
கவர்கின்றாய்…
உன்னருகே வரத்தான்
முயல்கின்றேன்…
பல தடைகள் இடையே
காண்கின்றேன்…
இருவரும்
அடியெடுத்து வைப்போம்
ஒருவரை ஒருவர்
நோக்கி…
சேர்ந்தே
போராடி இணைவோம்
தடைகளை
போக்கி…