கண்ணா!
வெண்ணெயைத் திருடி உண்டாய்
குறும்புகளால்
அன்னையரின்
மனதையும் திருடியுள்ளாய்
சிறு வயதில்!!!
பெண்களின்
ஆடைகளை திருடியுள்ளாய்
குழலூதி அவர்களின்
உள்ளங்களையும் திருடியுள்ளாய்
இள வயதில்!!!
திருடுவதில்
என்னதான் பெருமையோ…
ஆனாலும்…
பாடுகிறோம் போற்றுகிறோம்
ஏங்குகிறோம்
உன்னை எண்ணி…!!!